வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:14 IST)

ஒலிம்பிக் வீராங்கனையை நேரில் சென்று வரவேற்ற முதலமைச்சர்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவை அசாம் மாநில முதல்வர் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1 தங்கம் உள்ளிட்ட 7 விருதுகளை பெற்றுள்ளது. இந்த போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் போட்டியிட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் டோக்கியோவிலிருந்து அவர் இந்தியா திரும்பிய நிலையில், அசாம் மாநில விமான நிலையத்தில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக நேரடியாக விமான நிலையம் சென்ற அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பி சர்மா அவரை வரவேற்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.