புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (23:11 IST)

பாதிக்கப்பட பெண்ணிடம் இப்படி கேட்பதா??? நடிகை டாப்ஸி கோபம்!

மஹாராஷ்டிர மாநில மின்சார நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் மோகிஒத் சுபாஷ் சவான். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்புப் படித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர்,ம் மோமித் சிறுமியில் குடும்பத்தினரிடம் பேசி அந்தச் சிறுமியை கலியாணம் செய்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்த ஒப்பந்தமும் போடப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது மோகித் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளதால் அவர் மீது போக்சோசட்டம் பாய்ந்துள்ளது.

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, மோகித்திடம் நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறீர்களா எனக் கேட்டுள்ளனர்,. அதற்கு அவர் நான் முதலில் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கேட்டபோது அவர் என்னை மறுத்தார். அதனால் நான் வேறு பெண்ணை மணந்துகொண்டேன்...என்று கூறினார்.

இதையடுத்து நீதி அமர்வு... நீங்கள் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்…இல்லையென்றால் நீங்கள் அரசு வேலை இழந்து.... சிறைக்குப் போக நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாப்ஸி, இந்தக் கேள்வியை யாராவது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டார்களா? பாலியல் வன்கொடுமை செய்தவனை எப்படி அந்தப் பெண் மணக்க விரும்புவாள் ? இதெல்லாம் ஒரு கேள்வியா என்றும் இது ஒரு தண்டனையா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.