1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (15:59 IST)

அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் செல்ல உள்ள நிலையில்...மேலும் 6 பேர் உயிரிழப்பு

amith sha
மணிப்பூர் கலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநிலத்திற்கு செல்லவுள்ள நிலையில், மேலும்  பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் என்ற் மெஜாரிட்டி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு அங்குள்ள குகி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த நிலையில் இரு  வாரங்களுக்கு முன்பு இரு தரப்பினர் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.

இதில், 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 230க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். 

இந்த மாநிலத்தில் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும்,  '' பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கையில், 
பாதுகாப்பு படையினர் இதுவரை 40 பயங்கரவாதிகளை கொன்றுள்ளதாக'' நேற்று  முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் செல்கிறார். இங்கு புதிதாக வன்முறை வெடித்ததில்,6  பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.