1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (09:47 IST)

12ஆம் வகுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மகன் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகன் புல்கிட் கெஜ்ரிவால் சமீபத்தில் நடந்த 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்கள் எடுத்து சாதனை செய்துள்ளார். அவர் இந்த தேர்வில் 96.4% மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.
 
கடவுளின் அருளாலும், பெரியவர்களின் ஆசியாலும் எனது மகன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.4% மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக உணர்கிறேன்' என்று சுனிதா கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
சுனிதாவின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும் என்பது குறிப்பிடத்தக்கது. புல்கிட் கெஜ்ரிவால் நைனிடோவில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது