1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (16:03 IST)

ஆம் ஆத்மியின் அடுத்த டார்கெட் மேற்குவங்கம்!

2023 ஆம் ஆண்டு மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என மாநில பொறுப்பாளர் தெரிவித்திருக்கிறார். 

 
தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை வீழ்த்தி டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி சமீபத்தில் நடந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பிடித்தது.
 
இதனை அடுத்து ஆம் ஆத்மியின் இமாச்சல பிரதேச மாநிலத்தையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது. பஞ்சாப் வெற்றியை அடுத்து இமாச்சல பிரதேசத்தில் கால்பதிக்க ஆம் ஆத்மி கட்சியை தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறதாம். 
 
அடுத்த மாதம் இமாச்சல மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என மாநில பொறுப்பாளர் தெரிவித்திருக்கிறார். கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தல்படி தற்போதே உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.