தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று ஆம் ஆத்மியா?
நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் என காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா என்று இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியை தனது தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது
இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி தற்போது ஆட்சியில் உள்ளது என்பதும் அதே அளவுக்கு ஆம் ஆத்மி கட்சியும் தற்போது இரண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜகவுக்கு எதிரான ஒரே தேசிய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமராக பதவியேற்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
எனவே மற்ற கட்சிகள் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் தேசிய அளவில் இணைய வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்