செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (11:18 IST)

வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்க அடுத்தகட்ட இலக்கை முடிவு செய்த அருண் ஜெட்லி!!

ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி-யின் அமலாக்கம் உறுதியானது. இந்நிலையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது அடுத்த இலக்கை முடிவு செய்துவிட்டார்.


 
 
நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்திய வங்கித்துறையில் வளர்ந்து வரும் வராக்கடன் மீது கவனத்தைச் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
 
வங்கியில் குவிந்திருக்கும் வராக்கடன், பொரும்பாலனவை பணக்காரர்களுடையது. வராக்கடனை வங்கிகளுக்குத் திரும்ப அளிப்பதை விட இந்தப் பணத்தை நேரடியாக மத்திய அரசு விவசாயத்திற்கும், வறுமையை ஒழிக்கவும், MGNREGA திட்டத்திற்கும் பயன்படுத்தலாம். 
 
டிசம்பர் 2016 ஆம் ஆண்டு முடிவில் மொத்த வராக் கடன் அளவு 6.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
 
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து நடவடிக்கைகளையும், முடிவுகளையும் அறிவிக்கும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.