பர்தா அணிந்து பெண் மருத்துவர் வேடமிட்ட இளைஞர் கைது.... காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸார்
நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியின் வளாகத்தில் பர்தா அணிந்து கொண்டு பெண் மருத்துவர் போன்று சுற்றித் திரிந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மஹராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள இந்தியா காந்தி மருத்துவமனை வளாகத்தில் பர்தா அணிந்த ஒருவர் கடந்த 3 வார காலமாக சுற்றிக் கொண்டிருந்தார்.
அவர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் தன்னை டாக்டர் ஆயிஷா என்று அறிமுகம் செய்து கொண்டு, அங்கிருந்த நோயாளிகளிடமும் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது நடவடிக்கைகள் சந்தேகம் கொண்ட மராட்டிய பாதுகாப்பு படை அதிகாரிகள், அவர் உண்மையில் மருத்துவர் தானா என்று உறுதி செய்யும்படி, போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே போலீஸார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மருத்துவர் இல்லை என்பதும் அவர் பர்தா அணிந்து பெண் வேடத்தில் இருந்த ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர் பெண் குரலில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் என்றும் ஆணுடன் நட்பு கொள்ள வேண்டி இப்படி பெண் வேடமிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இவருக்கு திருமணமான நிலையில், இவரது மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.