1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (07:51 IST)

மனைவியுடன் காரில் சென்ற அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்: மர்ம நபர்கள் யார்?

மனைவியுடன் காரில் சென்ற அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்
ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி அவர்கள் பாஜக ஆதரவாளர் என்றும், அவர் பாஜகவுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பாகவும் பல செய்திகளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையால் நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்தி மீது கடும் கண்டனங்களை வைத்தார். சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் மூன்று சாமியார்கள் காங்கிரஸ் நபர்களால் தாக்கப்பட்டது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மௌனமாக இருக்கிறார்கள் என்றும், இதே வேறு மதத்தவர் தாக்கப்பட்டால் ’இத்தாலி சோனியா காந்தி’ உடனடியாக பேசியிருப்பார் என்றும் அவர் கூறினார். அர்னாப் கோஸ்வாமியின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் செய்தனர். 
 
இந்த நிலையில் நேற்று இரவு அர்னாப் கோஸ்வாமி தனது மும்பை அலுவலகத்தில் இருந்து காரில் தனது மனைவியுடன் வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்து அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாக தெரிகிறது 
 
இதனால் ஆத்திரமடைந்த அர்னாப் கோஸ்வாமி அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் காங்கிரஸ் கைக்கூலிகள் என்றும் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது