செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (16:46 IST)

எங்க விஜயபாஸ்கர காணல..? அரசை நெருக்கும் அழகிரி!!

சுகாதார அமைச்சர்  சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரி கேள்வி. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.  
 
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இந்தியா முழுவதும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 571 ஆக உள்ளதும் உறுதியாகியுள்ளது. 
 
மேலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மருத்துவர்களும் அமைச்சர் விஜயபாஸ்கரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படுவதாக அமைச்சரை பலர் பாராட்டினர்.  
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் செய்தியாளர்களை சந்தித்து எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷே செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். எனவே இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரி அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

 
கொரோனா நோயை எதிர்த்து சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பணியாளர்கள், தங்களை நோய் தொற்றிவிடும் என்கிற கவலை கடுகளவும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.
 
ஆனால் தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டிய  சுகாதார அமைச்சர்  சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார்.  இச்சூழலில் நேற்று மாலை புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்.
 
ஆனால் சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு  பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என கேட்டுள்ளார்.