1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (11:21 IST)

டிஆர்பி முறைகேடு; அர்னாப் கோஸ்வாமி சேனல் மீது போலீஸ் குற்றச்சாட்டு!

மும்பையில் டிஆர்பி ரேட்டிங் முறையில் அர்னாப் கோஸ்வாமியின் செய்தி சேனல் உட்பட மூன்று சேனல்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரபல ஊடகவியலாளரான அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் சேனலின் இயக்குனராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது ரிபப்ளிக் டிவி மற்றும் 2 மராத்தி சேனல்கள் டிஆர்பி ரேட்டிங் மீட்டரில் முறைகேடு செய்து பார்வையாளர்களை அதிகமாக காட்டியதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அர்னாப் கோஸ்வாமி கூறியிருக்கும் நிலையில், அவரது அரசியல் சார்பு பிடிக்காமல் மகாராஷ்டிர அரசு இதுபோன்ற வழக்குகளை அவர்மீது தொடுப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.