வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (14:21 IST)

கதறி அழுத முதியவருக்கு கை கொடுத்த நெட்டிசன்கள்! – ட்ரெண்டான பாபா தாபா கடை!

டெல்லியில் நீண்ட ஆண்டுகளாக சிற்றுண்டி உணவகம் நடத்தி வரும் முதிய தம்பதிகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர்களது கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.

டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் நீண்ட காலமாக தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனர். சமீப மாதங்களாக அவர்களது சிற்றுண்டி கடைக்கு வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துள்ளது. நாளுக்கு நாள் யாருமே வராத சூழல் ஏற்பட, பலருக்கு உணவளித்த அவர்கள் உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிற்றுண்டி கடை நடத்திய முதியவர் கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

வைரலான இந்த வீடியோவை பார்த்த நடிகை சோனம் கபூர், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோர் முதியவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். இந்நிலையில் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடைக்கு ஆதரவு அளிக்க கோரி இணையத்தில் பாபா கா தாபா என்ற ஹேஷ்டேக் வைரலானது. அதை தொடர்ந்து சுற்றிலும் உள்ள டெல்லி வாசிகள் பலர் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடையில் உணவருந்த குவிந்துள்ளனர். பிரபலங்கள் பலரும் பாபா கா தாபாவில் வந்து சாப்பிடுவதுடன் அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.