பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படும், கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதே நேரத்தில் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் என் மண் என் மக்கள் பாதை யாத்திரையின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது வள்ளலாரின் கொள்கையை கடைப்பிடித்து வரும் ஊரில் போலீசார் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் தெரிவித்தார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடப்படும் என்றும் அடுத்த கையெழுத்து கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் அதேபோல் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலை இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva