ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (20:56 IST)

சுஷாந்தை அடுத்து மற்றொரு இளம் நடிகர் தற்கொலை !

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. அதன்பிறகு பாலிவுட்டில் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக பலரும் குற்றம் சாட்டினர்.

ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் தனக்கான வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிப்பாதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். நடிகை தமன்னா தனக்காக விருதுகள் வாரிசுகளுக்கு தரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் பல நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக டுவீட் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் இச்சார், தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில்  ஹீரோவாக நடித்தவர் ஆஹூதோஷ் பாக்ரே இன்று தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஷூதோஷ் பாக்ரே  மயூரி தேஷ்முக் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் மஹாராஷ்டிராவில் உள்ளா நந்தத் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென்று பாக்ரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது பெற்றோர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸர் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது நடிகர் தற்கொலைக்காரன காரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.