செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (10:34 IST)

குரங்கை தூக்கில் தொங்கவிட்டு சித்தரவதை செய்த மனித நாய்கள்!

தண்ணீர் குடிக்க வந்த குரங்கை தூக்கில் தொங்கவிட்டு மனித நாய்கள் சித்தரவதை செய்த வீடியோ வைரலாகி பலரை கலங்க வைத்துள்ளது. 
 
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம் பகுதியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவரின் வீட்டின் தொட்டியில் குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க வந்து தொட்டிக்குள் விழுந்துவிட்டது. 
 
இதனை கண்ட வெங்கடேஸ்வர ராவ் அந்த குரங்கை காப்பாற்றாமல் மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதனால் உயிர்பிரிய துடிதுடித்துக்கொண்டிருந்த குரங்கை அங்கிருந்த நாய்கள் கடித்து குதற துவங்கியுள்ளனர். இதனால் நரக வேதனை அனுபவித்து அந்த குரங்கு உயிரிழந்தது. 
 
பின்னர் குரங்கை அந்த நாய்களுக்கே உணவாக வீசியுள்ளார் வெங்கடேஸ்வர ராவ். அப்போது அந்த பகுதியில் இருந்த மற்ற குரங்குகள் நாய்கள் இறந்த குரங்கை நெருங்காதவாறு பாதுகாத்துள்ளன. இந்த கொடூர சம்பவம் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தள்த்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 
 
இந்த வீடியோ வைரலனதை தொடர்ந்து அப்பகுதி போலீஸார் வெங்கடேஸ்வர ராவ் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.