திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (19:51 IST)

முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்!

Anil Chauhan
நம் நாட்டில் முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக  அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர்  8  ஆம் தேதி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின்  ராவத்  அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அதிகார பூர்வமாக அறிவித்தது.  நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியது இந்த நிகழ்வு.

இதையடுத்து, புதிய தலைமைத் தளபதியாக  அனில் சவுகான்  இன்று நியமிக்கப்பட்டடுள்ளார்.

ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல்  அனில் சவுகான் முப்படைகளின் 2 வது தலைமமைத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.