1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:12 IST)

பாகிஸ்தானில் ஹெலிகாஃப்டர் விபத்து: 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் பலி!~

pakistan
அண்டை நாடான பாகிஸ்தானில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் ஹெலிகாஃப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஹெரீ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

ஹெலிகாப்டர் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் பறந்துகொண்டிருக்கும்பபோது, திடீரென்று விபத்தில் சிக்க நேரிட்டது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ வீரர்களின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் இரங்கள் தெரிவித்துள்ளார்.