செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (16:28 IST)

ஸ்ரீதேவி மறைவு பற்றி சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா கருத்து

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தகவலை கேட்டதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. 
 
ஆனால், ஸ்ரீதேவி நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தடயவியில் துறை  தெரிவித்துள்ளது. மேலும் அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதால், மது போதையில் அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான ராம்கோபால் வர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எந்த மனிதரின் வாழ்க்கை முடிவாவது இவ்வளவு கொடூரமாக, சோகமாக இருந்ததுண்டா?, அவரின் மறைவு தகவலை கேட்டத்திலிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.