1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (18:27 IST)

ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சனம்.. நாளை முதல் இலவச டிகெட்டிகள்!

tirupathy
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் அங்கப்பிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் நாளை முதல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும்  ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள்  நாளை காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியாகும் என்றும், முன்னுரிமை அடிப்படையில்தான் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 1 முதல் 14 ஆம் தேதி வரையிலும்,  28 ஆம் தேதி தவிர மற்ற அனைத்து நாட்களிலும் ஆன்லைனில் டிக்கெட்டுகல் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை அனைத்து பக்தர்களும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.