திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (15:37 IST)

சந்திரபாபு நாயுடு மீண்டும் கைதா? ஆந்திர ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Chandrababu Naidu
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடுவுக்கு 3 வழக்குகளில் முன்ஜாமீன் அளிக்க ஆந்திர ஐகோர்ட் மறுத்துள்ளது.
 
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சிறையில் உள்ளார்.
 
அவரது நீதிமன்ற காவல் இரு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூ கலவர வழக்கு ஆகிய 3 வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அவரது சார்பில் முன்ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால் அவரின் 3 முன்ஜாமீன் மனுக்களையும் ஆந்திர ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
Edited by Mahendran