புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (19:40 IST)

டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தை நட்சத்திரம்! – மக்கள் வேதனை!

ஆந்திர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பிரபல குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாய் கிருஷ்ணா தனியார் தொலைக்காட்சியில் வெளியான குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர். பல்வேறு வகையான கதாப்பாத்திரங்களில் நடித்து காட்டி மக்களை சிரிப்பலையில் மூழ்க செய்தவர் சாய் கிருஷ்ணா.

சிலநாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாய் கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் அதிகரித்து வரவே உயர் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் போகும் வழியிலேயே கோகுல் சாய் கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த சிறுவன் இப்படி காய்ச்சலால் பரிதாபமாக இறந்த சம்பவம் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.