வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (18:49 IST)

ஜெகன் மோகன் ரெட்டிக்கு, நாயுடு மேல அப்படி என்ன கோவமோ??

ஆந்திர மாநிலத்தின் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாவலர்கள் குறைக்கப்படுவதாக, தற்போதைய ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமியிலான ஒய்.எஸ்,ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

இதனால் பல ஆண்டுகளாக ஆந்திராவில் ஆட்சியிலிருந்த தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு படு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தற்போதைய மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும் முன்னால் மாநில மந்திரியுமான நர லோகேஷ் ஆகியோருக்கு இனி 2+2 துப்பாக்கி பிரிவு பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும், இசட் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்வதாகவும் அறிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடம், விதி மீறலாக கட்டப்பட்டிருப்பதாக கூறி, அந்த கட்டடத்தை இடித்து தள்ள உத்தரவிட்டது ஜெகன் மோகன் அரசு.

இந்நிலையில் தற்போது சந்திரபாபு நாயுடுவிற்கு, இசட் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் உறுப்பினர்கள், பெரும் கொந்தளிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.