செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (09:29 IST)

அரசின் கட்டணக்குறைப்பால் 50 திரையரங்குகள் மூடல்!

ஆந்திர அரசு திரையரங்குகளுக்கான கட்டணத்தை தடாலடியாகக் குறைத்தது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீப காலமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது என்பது அதிக செலவு வைக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் டிக்கெட் விலைகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறைத்து அதைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் படி டிக்கெட் விலை 10 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை மட்டுமே இருக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்  மூலம் சினிமா நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும் என சொல்லப்பட்டது.

ஆனால் ஆந்திர திரையுலகில் இந்த கட்டண குறைப்பு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள சுமார் 50 திரையரங்குகள் இந்த குறைவான கட்டணத்தால் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கட்டணக்குறைப்புக்கு எதிராக நடிகர் சிரஞ்சீவி முதல் நானி வரை குரல் கொடுத்து வருகின்றனர்.