திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (11:45 IST)

9 ஆம் வகுப்பு மாணவியை நண்பர்களோடு சேர்ந்து சீரழித்த கொடூரன்

திருவனந்தபுரத்தில் 9 ஆம் வகுப்பு மாணவியை நண்பர்களோடு சேர்ந்து சீரழித்த கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போல் செய்யும் காமுகர்களுக்கு கொடூர தண்டனை வழங்கினால் ஒழிய இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் போகும்.
 
கேரள மாநிலம் திருனந்தபுரத்தை சேர்ந்த ராகுல்(19) என்பவன் நெடுமங்காடு உழுமலை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தான். ராகுலுக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் பழகி வந்தனர்.
 
இந்நிலையில் மாணவியை ஏமாற்றி அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை பலவந்தமாக கற்பழித்துள்ளான் ராகுல். மேலும் அதனை வீடியோவாக எடுத்துவைத்து மாணவியை அவ்வப்போது மிரட்டி அவரை கற்பழித்து வந்தான். கொடூரத்தின் உச்சமாய், தனது நண்பர்களோடு சேர்ந்து மாணவியை சீரழித்துள்ளான் அந்த மிருகம்.
 
அந்த மனிதமிருகத்தின் கொடுமை அதிகமானதால், மாணவி இதுகுறித்து பள்ளி ஆசிரியையிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவனது நண்பர்களை தேடி வருகின்றனர்.