1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:25 IST)

திருப்பதியில் சிக்கிய வினோத ஜந்துக்கள்.. கேமராவில் பதிவான காட்சிகள்

திருப்பதி வனப்பகுதியில் வினோதமான விலங்குகள் அலைவது தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் இருக்கும் சேஷாசலா வனப்பகுதியில் பல அபூர்வ விலங்குகள் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பாதுகாக்கும் நோக்கத்தோடு வனப்பகுதியில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன. அந்த கேமராக்களில் தற்போது வினோதமான, இது வரை அறியப்படாத விலங்குகள் பதிவாகியுள்ளன.

கேமராவில் புனுகு பூனை, 4 கொம்பு மான், சாம்பார் மான், சோம்பல் கரடி, உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சேஷாசலா வனப்பகுதியில், வன விலங்குகளின் உருவ படங்கள் அச்சிடப்பட்டு, பக்தர்கள் வனப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல விழிப்புணர்வு பலகைகளையும் வைக்க உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.