வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (12:10 IST)

குதூகலத்தில் மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட எம்.பி

நேஷனல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் விழாவின் போது மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் நேஷனல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதுகர் குக்தே என்ற எம்.பி பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
 
பின்னர் அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவிகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடினர். மாணவிகளின் நடனத்தை பார்த்து, பரவசமடைந்த எம்.பி திடீரென மாணவிகளோடு சேர்ந்து நடனமாடினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டது. இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.