வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (11:26 IST)

நெகிழ வைக்கும் தேசப்பற்று: தங்கப்பதக்கத்தை அபிநந்தனுக்கு சமர்பித்த மல்யுத்த வீரர்

சர்வதேச மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா, பதக்கத்தை அபிநந்தனுக்கு சமர்ப்பித்துள்ளார்.
தாய் நாட்டை காப்பதற்காக விமானப்படையில் பணிபுரிந்து எதிரி நாட்டிடம் சிக்கி, தன் உயிரையும் பணயம் வைத்து இந்தியாவின் ரகசியத்தை சற்றும் வெளிப்படுத்தாமல் தைரியமாக பாகிஸ்தான் அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்ட வீரர் அபிநந்தனை நாடே கொண்டாடி வருகிறது. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆகிவிட்டனர்.
 
இந்நிலையில் ல்கேரியாவின் ரூஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான மல்யுத்த இறுதிப்போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அமெரிக்க வீரர் ஜோர்டன் ஆலிவருடன் மோதினார். 12-3 என்ற கோல் கணக்கில் பஜ்ரங் புனியா ஜோர்டனை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.
 
தங்கப்பதக்கத்தை வென்ற அவர் இந்த வெற்றியை அபிநந்தனுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார். இவரின் தேசப்பற்றை பாராட்டி பலர் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.