புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (05:03 IST)

அரசை தவறாக விமர்சனம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை: தெலுங்கானா அரசு

அரசு தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுவது தான் குடிமக்களின் கடமை. தட்டி கேட்க இல்லாத அமைச்சர் உள்ள நாட்டில் மன்னன் சரியான ஆட்சியை நடத்த முடியாது என்று வள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் தட்டி கேட்பதாக கூறி கொண்டு ஒருசிலர் நல்ல திட்டங்களையும் தவறாக விமர்சனம் செய்து மக்களிடம் நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசையோ, அரசின் கொள்கையையோ தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் ஒன்றை தெலுங்கானா மாநில அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது

குறிப்பாக சமூக  வலைத்தளங்களில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்துவிட்டு கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று பலர் கிளம்பிவிட்டதால் அதனை தடுக்கவே இந்த சட்டம் என்று அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.