நான் பதவி விலக தயாராக இருக்கிறேன்… மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்!
மேற்கு வங்கத்தின் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மேற்கு வங்கத்தில் எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்று பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 17 ஆம் தேதி நடக்கும் நிலையில் அதற்காக பிரச்சாரம் செய்துவரும் அமித் ஷா என்னை பதவி விலக சொல்லி மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறார். மேற்கு வங்க மக்கள் சொன்னால் நான் பதவி விலகத் தயார். ஆனால் மே 2 வாக்கு எண்ணும் நாளில் மம்தா பானர்ஜியும் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளார்.