செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:14 IST)

இந்தியாவை ஒன்றிணைக்க இந்தியால் முடியும்! – அமித்ஷா ட்வீட்!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திக்கு ஆதரவாக அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிப்பதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா தனது ட்விட்டரில் இந்தி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. அதன் அசல் தன்மையும் எளிமையும்தான் இந்தியின் பலமே! இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. மொழி, கலாச்சாரம் என்று இந்தியா வேறுப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.