வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (13:52 IST)

12 செயற்கை கோள்கள்: இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா

12 செயற்கை கோள்களை விண்ணியில் ஏவ இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளதாக இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ நிறுவனம், பிற நாடுகளுடைய செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் பிற நாடுகளின் 74 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
 
இஸ்ரோ மற்ற நாடுகளின் உதவி இல்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறது. அண்மையில் ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. 
 
இஸ்ரோவின் பல விதமான முயற்சிகளின் வெற்றியால் அனைத்து நாடுகளின் கவனமும் இந்தியா மெல் திரும்பியுள்ளது. இதனால் அமெரிக்கா தற்போது 12 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளதாக, இஸ்ரோ உயர் அதிகாரி கூறியுள்ளார்.