வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (18:19 IST)

நல்ல ரேட்டுக்கு வந்துச்சு.. வித்துட்டேன்! – அமேசானில் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!

டெல்லியில் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்யும் நபர் கஸ்டமருக்கு வந்த போனை வெளியே விற்று ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் அமேசானில் சலுகை விலையில் அதிக விலை கொண்ட மொபைல் ஒன்று கிடைக்கவும் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் மொபைல் டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் அவரது ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டதாகவும் விரைவில் உங்கள் பணம் வங்கி கணக்கில் அனுப்பப்படும் என்றும் சொல்லியுள்ளார்.

ஆனால் கஸ்டமருக்கு போன் டெலிவரி ஆகிவிட்டதாக காட்டியதால் அவர் அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் ஆர்டர் கேன்சல் ஆகவில்லை என்றும், அவரது பெயரில் டெலிவரி ஆகியிருப்பதாகவும் உறுதி செய்துள்ளனர். டெலிவரி பாய் மீது சந்தேகம் வரவே அந்த வாடிக்கையாளர் டெலிவரி பாய் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

டெலிவரி பாய் மனோஜை பிடித்து விசாரிக்கையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். வாடிக்கையாளருக்கு டெலிவரிக்கு வந்த போனை வெளியே வேறு ஒருவர் அதிக விலைக்கு கேட்டதால் அதை விற்று விட்டு வாடிக்கையாளரை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.