ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:41 IST)

அமா்நாத் யாத்திரை நிறைவு: இந்த ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை...!

amarnath cave
அமர்நாத் யாத்திரை நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

இமயமலையில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் செய்து வருகின்றனர்.

48 கிலோமீட்டர் கொண்ட இந்த வழித்தடத்தில் 14 கிலோ மீட்டர் தொலைவு செங்குத்தான வழித்தடம் என்பதும் இந்த வழித்தடங்களில் தான் பக்தர்கள் ரிஸ்க் எடுத்து பனிலிங்கத்தை தரிசனம் செய்ய சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை யாத்திரை நேற்று நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் 5.10 லட்சம் பக்தர்கள் குகை கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது என்பதும், ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைந்தது என்பதுன் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran