ஒரு டவுட்டு...! மாஸ்க் எல்லோரும் கட்டாயம் அணிய வேண்டுமா??
கொரோனா பரவி வரும் நிலையில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமா என மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் அதிகமான உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து எழும் பல கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்து வருகிறது. அந்த வகையில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்துள்ளதாவது, அனைவரும் முக கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டும் பிறருக்கு அது பரவாமல் இருக்க முக கவசம் அணியலாம்.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் பணிவிடை செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.