தொடர்புடைய செய்திகள்
- ’ஐபிஎல் ’போட்டிக்கு வில்லன் ஆனதா ’கொரோனா வைரஸ்’ ? ரசிகர்கள் குழப்பம் !
- சீனாவில் திடீரென குறைந்த கொரோனா வைரஸ்: இதுதான் காரணம்
- கொரோனா வைரஸ்: கைகுலுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது?
- கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு
- கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான பாதிப்பு
பாரதியார் போலவே இதுவும் சாதி பார்க்காது: கொரானோ குறித்து பிரபல இயக்குனர்
மகாகவி பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று அனைத்து சாதிகளுக்கும் பொதுவாக இருந்தது போலவே கொரோனா வைரஸும் சாதிமத பேதமின்றி அனைத்து ஜாதியினரையும் தாக்கி வருவதாக பிரபல இயக்குனர் மற்றும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் பதிவு செய்த டுவிட் ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படித் தப்பிக்கலாம் என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் தமிழக அரசு வெளியிட்ட குறிப்புகளை தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதியார், அதேபோல் சாதிகள் இல்லையடி என்று ‘மகாகவி கொரோனா’வும் கூறிவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். அருண்ராஜா காமராஜரின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
சாதிகள் இல்லையடி பாப்பா #எல்லாசாதியையும்சமமாகபார்க்கும் #மகாகவிகொரோனா#CoronaAlert pic.twitter.com/0Q2cOFhyx1
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) March 4, 2020
அடுத்த கட்டுரையில்
