திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மே 2024 (15:54 IST)

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இன்று முதல் முதலாக தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் அவர் கனடா குடியுரிமை வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் கனடா குடியுரிமையை திரும்ப கொடுத்துவிட்டு அவர் இந்திய குடியுரிமை கேட்டு பெற்றார் 
 
இந்த நிலையில் இந்திய குடியுரிமை பெற்றபின் அவர் முதல் முதலாக இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்தியா வளர்ச்சி அடைய, வலுவானதாக மாற வேண்டும் என்பதற்காக சரியான நபருக்கு வாக்களியுங்கள் என்றும் மக்கள் தங்களுக்கு எது யார் சரி என்று படுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
மும்பையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பல பாலிவுட் பிரபலங்கள் தேர்தலில் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran