செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (13:24 IST)

கண்ணீரும் கம்பலையுமாக மாமனார் வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்!

லாலு பிரசாத் யாதவ் மருமகள் ஐஸ்வர்யா ராய், கண்ணீருடன் சூட்கேசை எடுத்துக்கோண்டு வெளியேறிய புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கடந்த ஆண்டு மே மாதம், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ சந்திரகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்யை, திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த திருமண பந்தம் 6 மாதம் கூட நிலைக்காத நிலையில், விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அனுகினார் தேஜ் பிரதாப். ஆனால் இரு குடும்பத்தாரும், இவர்களை சேர்ந்து வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் வீடிலேயே தங்கி வந்தார். 
 
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கையில் சூட்கேஸுடன் கதறி அழுதபடி லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.