செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (08:47 IST)

12 மணிநேரம் தாமதமாக கிளம்பிய விமானம் – காரணம் ஒரு எலியா ?

ஹைதராபாத்தில் எலியால் விமானம் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டினம் செல்ல தயாராக இருந்தது அந்த ஏர் இந்தியா விமானம்.  இந்நிலையில் அந்த விமானத்தில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்துவிட்ட ஊழியர்கள் அதனைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் அத்தனை பேரையும் ஏமாற்றி தப்பித்துள்ளது அந்த எலி. இதனால் காலை 6 மணிக்கே புறப்படவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டே மாலை வரை புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்..

பின்னர் ஒருவழியாக எலியை மாலை 5 மணிக்குப் பிடித்தனர் ஊழியர்கள். அதன் பின் அந்த விமானம் 11.30 மணிநேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டது. இந்த விஷயம் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.