1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (14:36 IST)

இந்தியர்களை மீட்க உக்ரைன் செல்லும் விமானப்படை சி-17 ரக விமானம்?

ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் தகவல். 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்திய மக்கள் அண்டை நாடுகள் வழியாக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் விமானம் வழியாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் போர் உக்கிரமடையும் சூழல் உள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையில் பெரிய விமானமான போயிங் சி17 ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் இந்த விமானத்தில் உக்ரைன் மக்களுக்கு உதவும் நல் எண்ணத்தின் பேரில் மருந்துகள், உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அத்னபடி ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.