வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (11:12 IST)

ஒடிஷா ரயில் விபத்தில் காணாமல் போன 11 தமிழர்கள் இவர்கள் தான்: முழு விவரங்கள்..!

ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போன 11 தமிழர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது 
 
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 200க்கும் அதிகமானோர் பலியான நிலையில் தற்போது இந்த ரயிலில் பயணம் செய்த 11 தமிழர்களை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.
 
அவர்கள் உமாதேவி, நரகனி கோபி, கார்த்திக், ரகுநாத், உதயகுமார், மீனா, ஜெகதீசன், கமல், கல்பனா, அருண் மற்றும் முருகன் ஆகியோர் காணாமல் போனவர் ஆகும். 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி உமாதேவி, உதயகுமார், முருகன் ஆகிய மூவரின் தகவல் தற்போது கிடைத்துவிட்டதை அடுத்து, காணாமல் போன 8 பேர்களின் உறவினர்கள் 044 28593990 9445869843  8012805050 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva