ரிசர்வ் வங்கியில் (RBI) 450 உதவியாளர் பணிகள்! Any Degree போதும்! – உடனே அப்ளை பண்ணுங்க!
இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) 450 உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் மேலாண்மையை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அமைப்பாக விளங்கும் ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கு 450 இடங்கள் காலியாக உள்ளன.
மொத்தம் உள்ள 450 இடங்களில் SC – 45, ST – 56, OBC – 71, EWS – 37, General – 241 என இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 02.09.1995 க்கு முன்னதாகவோ 01.09.2003க்கு பின்பாகவோ பிறந்தவராக இருத்தல் கூடாது. வயது வரம்பு 20 முதல் 28 வரை..
வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை சமர்பிக்கவும், தேர்வு கட்டணம் செலுத்தவும் செப்டம்பர் 3 முதல் அக்டோபர் 4 வரை கால அவகாசம் உள்ளது.
விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் ப்ரிலிமினெரி தேர்வுகள் அக்டோபர் 21ம் தேதியும், மெயின் தேர்வு டிசம்பர் 2ம் தேதியும் நடைபெறும்.
Edit by Prasanth.K