வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2023 (11:49 IST)

FPO பங்கு விற்பனையை திரும்பப்பெற்ற அதானி! பணத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு..!

Adani
அதானி நிறுவனத்தின் FPO  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 20000 கோடி இதன் மூலம் நிதி திரட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதானி குழுமங்களின் பங்குகள் குறைந்து வந்த போதிலும் இந்திய மக்கள் அதானி மீது நம்பிக்கை வைத்து அவருடைய FPO திட்டத்தில் முதலீடு செய்தனர். இருபதாயிரம் கோடி திரட்ட திட்டமிட்டு இருந்த நிலையில் முழுமையாக பணம் திரட்டப்பட்டதாக அதானி குழுமம் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்து வருவதை அடுத்து FPO விற்பனையை திரும்ப பெறுவதாக அதானி குழும இயக்குனர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதலீட்டாளர்களுக்கு இருபதாயிரம் கோடியை திருப்பிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் பணம்ன் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 முதலீட்டாளர்களை தொடர்ந்து நஷ்டத்தில் ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தான் தனக்கு முக்கியம் என்றும் அதனால் பெற முடிவு செய்துள்ளதாகவும் அதானி தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva