திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (08:04 IST)

சரத்பவாரை திடீரென சந்தித்த கவுதம் அதானி.. ஹிண்டன்பர்க் விவகாரமா?

தேசியவாத கட்சி தலைவர் சரத் பவாரை நேற்று திடீரென கவுதம் அதானி சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக கவுதம் அதானியின் நிறுவனங்கள் பங்குகள் சரிந்த நிலையில் அதானிக்கு எதிராக பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்த நிலையில் தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார் மட்டுமே அவருக்கு ஆதரவாத கருத்து தெரிவித்தார். 
 
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஜேசிபி விசாரணை கோரிய நிலையில் நேற்று சரத் பவாரை கவுதம் அதானி திடீரென சந்தித்தார். சரத்பவார் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஒரு சில முக்கிய ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்ததாகவும் இந்த சந்திப்பின்போது அதானி மற்றும் அவருடைய குழுமத்திற்கு தன்னுடைய ஆதரவு உண்டு என சரத்பவார் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva