அதானி குழுமத்தை அடுத்து குறிவைக்கப்பட்ட டுவிட்டர் நிறுவனர்: ஹின்டன்பர்க் அறிக்கையால் 22% சரிவு..!
சமீபத்தில் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது என்பதும் உலகின் இரண்டாவது பணக்காரராக இருந்த அதானி தற்போது 20 இடங்களுக்கும் பின்னுக்கு தள்ளப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அதானி குழுமத்தை அடுத்து தற்போது மற்றொரு நிறுவனத்தின் மீதும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி என்பவர் பிளாக் என்னும் டிஜிட்டல் பேமென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்
இந்த செயலி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக போலி கணக்குகள் தொடங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாக ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் இன்றைய அமெரிக்க சந்தையில் பிளாக் நிறுவனத்தின் பங்குகள் 22% சரிந்துள்ளது.
Edited by Siva