செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (11:06 IST)

ஷாலினி அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி இன்று தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மலையாளியான ஷாலினி, பாபு மற்றும் அலிஸ்  தம்பதிக்கு1979ம் ஆண்டு நவம்பவர் 20 தேதி பிறந்தார். 
 
ஓசை என்ற தமிழ் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக 1984ம் ஆண்டு சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் ஷாலினி. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட ஏராளமான படங்களில் நடித்த ஷாலினி, 
 
1997ம் ஆண்டு அனையதை பிரவு என்ற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். பின்னர் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படத்தில் அதே ஆண்டில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதைத்தொடர்ந்து அஜித்துடன் 1999ம் ஆண்டு அமர்களம் படத்தில் நடித்தார், 
 
மேலும் நிறம் (1999), கண்ணுக்குள் நிலவு(2000), அலைபாயுதே(2000), பிரியாத வரம் வேண்டும் (2001) ஆகிய படஙகளில் நடித்தார். அலைபாயுதே படத்தில் நடித்ததுக்காக தமிழ அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். 
 
2001ம் ஆண்டு நடிகர் அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அஜித்- ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.  இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாலினி அஜித்துக்கு ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்து மழை பொழித்து வருகிறார்கள்.