1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (15:16 IST)

மோடி புகைப்படத்தை வெளியிட்டால் ரூ.25,000 பரிசு! பிரபல நடிகை அறிவிப்பு

பிரதமர் மோடி புகைப்படத்தை வெளியிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசு தொகை வழங்கப்படும் என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.


 

 
குஜராத், பீகார் ஆகிய பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் உடமைகள் இன்றி தவித்து வருகின்றனர். இதுவரை பிரதமர் மோடி அந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட வில்லை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவியாக இருக்கும் நடிகை ரம்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோடி மழை வெள்ள பகுதிகளை பார்வையிடுவது போல் உள்ள புகைப்படத்தை வெளியிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.