ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடாரல் ஏற்பட்ட புற்றுநோய் - ரூ.2672 கோடி அபராதம்
ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியால் புற்று நோய் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அமெரிக்க ரூ. 2672 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான ஆயில், பவுடர், சோப்பு, ஷாம்பு, மசாஜ் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் சில பெண்கள் பல வருடங்கள் இந்த பவுடரை தாங்களும் பயன்படுத்தி வருகிறார்கள். அந்நிலையில், இந்த நிறுவனம் தயாரிக்கும் பவுடரில் கலந்திருக்கும் ரசாயணம் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் கொண்டது என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. மேலும், நீதிமன்றங்களிலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு கூட அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் இந்த பவுடரை உபயோகித்ததால் தனக்கு புற்றுநோயால் ஏற்பட்டதாக கூறி இந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அதே கலிபோர்னியாவை சேர்ந்த ஈவா எக்கேவர்ரியா (63) என்ற பெண், சிறு வயதிலிருந்தே தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் கடந்த 2007ம் ஆண்டு முதல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புற்றுநோயின் தாக்கம் காரணமாக தற்போது அவர் மரண படுக்கையில் இருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் எந்த தகவலை முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதை இந்த நிறுவனம் தவிர்த்துள்ளது எனக்கூறி, அப்பெண்ணின் மருத்துவ செலவிற்கு அபாரதமாக ரூ.41 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2672 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.