வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (16:47 IST)

ஏன் இப்படி செய்தீர்கள்? முதல்வருக்கு கேள்வி எழுப்பிய மாளவிகா மோகனன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு தனது டுவிட்டரில் ஏன் இப்படி செய்தீர்கள் என நடிகை மாளவிகா மோகனன் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பினரயி விஜயன் மீண்டும் வெற்றி பெற்றார் என்பதும் அவர் விரைவில் முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தவர் சைலஜா என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது.
 
இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் அவருக்கு இடம் இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் ஒரு நல்ல அமைச்சரை ஏன் அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்தீர்கள்? இங்கே என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாளவிகா மோகனன் இந்த டுவிட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது