செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (12:35 IST)

நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்த நடிகை

நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்த நடிகை

நடன நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த போதே, மயங்கி விழுந்து நடிகை அஸ்வினி மரணமடைந்த விவகாரம் மாரத்தி சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பிரேம் ஹை, தும்காதா உள்ளிட்ட பல மராத்திய படங்களில் நடித்தவர் நடிகை அஸ்வினி ஏக்போதே(44). இவர், கணபதி பாபா மோரியா உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
இவர் 2009ம் ஆண்டின், சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றுள்ளார். மேலும், இவர் ஒரு பரத நாட்டிய கலைஞரும் ஆவார். அவ்வப்போது நாட்டிய நிகழ்ச்சிகளையும அவர் நடத்தி வந்தார்.
 
கடந்த 22ம் தேதி, புனேவில் உள்ள பாரத் நாட்டிய மந்திர் அரங்கில் நடைபெற்ற ‘ நாட்டியதிரிவிதா’ என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் நடனமாடினார். ஏராளமான சக கலைஞர்களுடன் அவர் நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரெனெ மேடையிலேயே மயங்கி விழுந்தார். 
 
இதனால் பார்வையாளர்களும், சக நடன கலைஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக கூறினார். திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பே அவரின் உயிரை பறித்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
அவரின் மரணம் மராத்திய திரையுலகினருக்கு அதிர்ச்சியைம், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.