திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (14:02 IST)

பிரபல நடிகை தற்கொலை - கணவருடன் கருத்து வேறுபாடு?

பிரபல பாலிவுட் நடிகை பிதிஷா பெஸ்பருவா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதிஷா பெஸ்பருவா(30). மாடல் அழகியாக இருந்த அவர், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். திரைத்துறையில் பாடகியாகவும் வலம் வந்தார். சமீபத்தில் வெளியான பாலிவுட் ‘ஜக்கா ஜசூஸ்’ படத்திலும் அவர் நடித்துள்ளார்.
 
கடந்த வருடம் இவர் குஜராத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரோடு அவருக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. மேலும், கணவரின் பெற்றோர்கள் தன்னை கொடுமைபடுத்துவதாக, அவரின் தந்தையிடம் அவர் கூறிவந்தார். மேலும், விரைவில் அவரை விவாகரத்து செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார்.
 
இந்நிலையில், கடந்த 17ம் தேதி, அவரின் தந்தை அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக தாழ்போள் போடப்பட்டிருந்தது. எனவே, கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிதிஷா தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.